புரட்டாசி மாதம் அமையும் ஒவ்வொரு சனிகிழமையையும் புனித நாளாக கருதுவது இந்துக்களின் வழக்கம் திருப்பதி வேங்கடஜலபதிப் பெருமாளுக்குரிய தினமாகவும் புரட்டாசி சனிகிழமைகள் கருதப்படுகின்றன
ஒவ்வொரு புரட்டாசி சனிகிழமையும் விரதம் இருந்து சிறப்பு பூஜை செய்வது பெண்களின் வழக்கம் சனிகிழமைகளில் மாவிளக்கு ஏற்றி வெங்கடசலபதியை வணங்குவர் மாவிலே விளக்கு போல் செய்து அதில் நெய் விட்டு தீபம் ஏற்றுவர் பூஜைக்குரிய பொருட்களை முன்னதாக சேகரம் செய்து வைத்து கொள்ள வேண்டும் புரட்டாசி சனிகிழமைகளில் விடியற் காலையில் எழுந்து தலை ஸ்நானம் செய்து மடி புடவை கட்டிக்கொண்டு சமைப்பர் MAIN ITEAM சக்கரை பொங்கல் சமையல் முடித்து பூஜை அறையை சுத்தம் செய்து வேங்கடாசலபதி படத்தை துடைத்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்
அதன்பின் ஒரு ஆசனத்தில் மஞ்சள் தடவி கோலம் போடவும் அதன் மீது படத்தை வைக்க வேண்டும் அதற்குள் யாராவது ஒருத்தர் பூஜைக்கு வேண்டிய தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு பூ ஊதுவத்தி கற்பூரம் வாங்கி வரச்சொல்லுங்கள் அதன்பின் பூவை தண்ணீரால் தெளிக்க வேண்டும் தேங்காயை கழுவ வேண்டும் ஒரு தட்டில் பூஜை பொருட்களை வைத்து பூவை படத்தில் சாத்தவும் விளக்கேற்றவும் ஊதுலத்தி ஸ்வாமிக்கு காட்டி வைக்கவும் அதன்பின் பெருமாளின் ஸ்லோகம் சொல்லவும்
அதன்பின் நீங்கள் செய்து வைத்த பதார்த்தங்களை ஸ்வாமிக்கு முன் வைக்கவும் மாவிளக்கில் தீபம் ஏற்றவும் ஸ்வாமிக்கு நைவேத்தியம் காட்டவும் அதன்பின் வீட்டில் உள்ளவர்களை அழைத்து கற்பூர ஆரத்தி காட்டவும் இதையெல்லாம் மடியோடு செய்ய வேண்டும் யாரும் பதர்த்தங்களை தொடாமல் பார்த்து கொள்ள வேண்டும் விரதம் இருப்பவர்கள் காலையில் பால் பழம் சாப்பிடலாம் பகலில் உறங்க கூடாது அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று வரவும் இதேபோல் ஒவ்வொரு புரட்டாசி சனிகிழமைகளிலும் செய்யவும்
ஓம் நமோ வேங்கடேசாய
__._,_.___