They are doing a great job: www.forangelsonly.org

[FAO] மஹாபெரியவா அருள் வாக்குகள்



99% மட்டுமே நம் பிடியில்  எடுக்கமுடியும். மீதி 1% கடவுளின் பிடியில்.....

சகாதேவன், தனக்கு ஜோதிடக்கலை தெரியும் என்ற ஆணவத்தில் சற்று கர்வம்
அதிகமாகிவிட்டது. துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு , போருக்கான
சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க , சகாதேவனும் நாளைக்குறித்துக்கொடுக்கிறான்.

அந்தளவிற்கு தன் கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான், கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை தெரியவருகிறது.
இதனால் தான் கற்ற கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியவில்லையே  என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான்.

18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப்போர் முடிவடைந்தபின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே எள்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா என்று கேட்கிறார். ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்துகொண்டேன், ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் கணிதத்தில் வரவில்லை அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன். இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாருபாருங்க பதில்.

அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு??? இந்த பதிலை கேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கிவாறிப்போட்டது. அடங்கியது அவன் கர்வம். எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும். மீதி 1% கடவுளின் பிடியில்.....

இந்த ரகசியமானது காஞ்சிமகா பெரியவரிடம் இருந்து உதிர்ந்தது

N Jambunathan - A1, Sonex Samyuktha -Appartments, - 15, Karnan Street, Rengarajapuram, Koddambakkam, - Chennai 600 024. Hand Phone - 09176159004.


__._,_.___

Posted by: "N.Jambunathan" <n.jambunathan@yahoo.co.in>


www.ForAngelsOnly.Org




__,_._,___

[FAO] ஞான வாள் ஏந்துவோம் !!!



ஓம் சிவசிவ : ஞான வாள் ஏந்துவோம் !!!

பகை அரசுக்கு எதிராக புகழ்ச் சோழ நாயனார் , தன் அமைச்சர்கள் மற்றும் படைத் தளபதிகளிடம் , "' ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ ? படை எழுந்து அப் பாங்கு அரணம் துகலாகப் பற்று அறுப்பீர் "" எனப் பகர்ந்தார் (17)

இங்கு உங்களுக்கு எதிர் நிற்கும் கோட்டையும் உளதோ ? (இது படையினரைப் புகழ்ந்து அவர் வீரத் திற உணர்வை அரசன் , உணர்த்தும் முறைமை ) "" ""படைகளை எழுச்சியுறத் திரட்டி அந்த கோட்டையைத் துகளாகச் செய்வீர் "", என்பது , அரசன் அவர்களுக்கு இட்ட ஆணை !

அடல் வானவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து , / கடல் அனைய நெடும் படையைக் கை வகுத்து மேல் செல்வார் /படர் வனமும் நெடுங் கிரியும் பயில் அரணும் பொடியாக /மிடல் உடை நால் கருவி உற வெஞ் சமத்தை மிக விளைத்தார். (திருத் தொண்டர் புராணம் / புகழ்ச் சோழ நாயனார் (18)

தேசத்துக்கு ஆபத்து என்றால் , எப்படி வெகுண்டெழ வேண்டும் என்பதை உணர்ச்சியற்ற மரங்கள் உணர வேண்டும் !  கடந்த ஒரு வாரத்தில் சீனர்களுக்கு எதிராகச் சிந்திக்காதவன் , தேசக் காப்புக்கும் பகை அழியவும் இறைவனை இறைஞ்சாதவன், இந்த ஞான பூமிக்குப் பாரம் ? எங்ஙனம் ஆளும் அருள் ?
நம்மை நன் நெறியில் செலுத்தும் சமயத்தைத் தாங்கிப் பின்னிப் பிணைந்திருப்பது இந்த சிவ பூமி அல்லவா ? சிந்தியுங்கள் ! ஞான வாள் ஏந்துங்கள் !!!

130- கோடி மக்களை உடைய இந்திய நாடு , உலக நாடுகள் நோக்கில் மிகப் பெரிய வர்த்தகச் சந்தை ! நம்மிடம் பொருளை ஈட்டி , வலுத்து , நம்மையே எதிர்த்துத் துரோகம் செய்யும் சீன நாட்டுக்கு முடிவு கட்ட ஒரே வழி ! இது அறப் போர் ! முப்படைப் போரை விடப் பொருளாதாரப் போர் , எதிரிகளையும் துரோகிகளையும் செயவிழக்கச் செய்து விடும் !

இல்லக் காப்புக்காகத் திரைக் கடல் ஓடிச் சென்று பொருள் திரட்டி , இங்கு கொண்டு வருவது ,  பகை நாட்டோருக்கும் , அகப் பகைவர்களுக்கும் , துரோகிகளுக்கும் , கொட்டிக் கொடுத்து , நமக்கு எதிராக நாமே கேட்டினை வளர்த்துக் கொள்வதற்கா ?
 என்னே அறிவுடைமை ?

அறப் போரே , இந்த தேசத்துக்காகத் தம் இல்ல நலன்களையும் , இன்னுயிரையும் , தியாகம் செய்யும் வீரர்களுக்கு நாம் செய்யும் நன்றியாகவும்  இருக்கும். 
ஞான வாள் ஏந்துவோம் !!! பகையைப் புறக்கணித்து வெற்றி கொள்வோம்.

இந்தியா முதன்மை  வல்லரசாகும் ; எதிரிகள் செயலிழந்து விடுவர் !
சீனம் எதிர் காலத்தில் வறுமையால் பல நாடுகளாகச் சிதறிவிடும் !
எதிர் காலத்தில் போர்களுக்கான நிலை எழாது !
இந்தியச் சிறு தொழில் முனைவோர் வளர்ந்து எழுவர் : வேலையிலாத் திண்டாட்டம் முழுதும் ஒழியும் !
பொருளா தாரத்திலும் இந்தியா தலைமை நிலையினை எய்தும் !

இதை விட நம்மைத் தாங்கி நின்று , ஊட்டி வளர்க்கும் பாரதத் தாய்க்குச் செய்யும்  நன்றி வேறுண்டோ ? இதனை , இது நம்மைத் தாங்கும் , நம் தேசம் என்ற  உணர்ச்சி இலாச் சுய நலமிகளும்,  தேசத் துரோகிகளும் பின் பற்றார் ! ஆகவே இந்திய வர்த்தகர்களுக்கு இதில் தனிப் பொறுப்புகள் உள்ளன.  "எரிவதை அணைத்தால் கொதிப்பது நின்று விடும் "" ,என்பது அனைவரும் அறிந்த ஞானம். நம் வம்சா வழியினருக்கு , நாம் ஒரு பாதுகாப்பான எதிர் காலத்தை விட்டுச் செல்ல வேண்டாமா? சீனப் பொருட்கள் இன்றி வாழவே முடியாதா என்ன ?

இறைவனிடம் மனமுருகி , தேசத்தைக் காத்தருளுமாறும் , உள் , அயற் பகைகளையும் , உடனிருந்தே கொல்லும் வியாதிகளையும், சத்தியற்றுப் போகச் செய்யுமாறும்,  இறைஞ்சித் திருவைந்தெழுத்து ஓதுவோம் ; அமைதியாகப் பகைவர்களுக்கு எதிராகப் பொருளாதாரப் போர் புரிவோம் ; பகைவர்களுடன் வர்த்தகம் செய்தல் தேச , சமய , சிவத் துரோகம் என்பதைச் சுற்றி வாழ்வோருக்கு எட்டும் வரை உபதேசித்துத் தொண்டு புரியுங்கள் !

இது கத்தி இன்றி,  இரத்தமின்றி இயற்றும் , இறை சத்தியை பகைக்கு எதிராக இயக்கும் போர் ! இந்தியன் என்ற உணர்ச்சி இலாதவனுக்கு அடுத்தப் பிறவி , குடிசையும் , நீரும் உணவும் இல்லாத நாடுகளில் தான் . சிந்தித்தால் இது உறைக்கும் !
திருச்சிற்றம்பலம்

Post by : Komal Sekar in My Whtsapp now shared

N Jambunathan - A1, Sonex Samyuktha -Appartments, - 15, Karnan Street, Rengarajapuram, Koddambakkam, - Chennai 600 024. Hand Phone - 09176159004.



__._,_.___

Posted by: "N.Jambunathan" <n.jambunathan@yahoo.co.in>


www.ForAngelsOnly.Org




__,_._,___

[FAO] Message for the Day 17th June 2020



Mental Churning 


*A beautiful mind leads to a beautiful personality which shows itself through our thoughts, words and actions.* So taking utmost care of the mind in the early morning hours is extremely important because the absorption capacity of the mind at that time is very high and giving instructions to it in the form of thoughts based on the soul and the Supreme Soul makes the mind soul-conscious and this is a training to the mind to keep its remembrance oriented towards the soul i.e.. its own spiritual self and the Father of the spiritual self, who is God, the entire day after that.



N Jambunathan - A1, Sonex Samyuktha -Appartments, - 15, Karnan Street, Rengarajapuram, Koddambakkam, - Chennai 600 024. Hand Phone - 09176159004.


__._,_.___

Posted by: "N.Jambunathan" <n.jambunathan@yahoo.co.in>


www.ForAngelsOnly.Org




__,_._,___
Newer Posts Older Posts Home

More....