ஓம் சிவசிவ : ஞான வாள் ஏந்துவோம் !!!
பகை அரசுக்கு எதிராக புகழ்ச் சோழ நாயனார் , தன் அமைச்சர்கள் மற்றும் படைத் தளபதிகளிடம் , "' ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ ? படை எழுந்து அப் பாங்கு அரணம் துகலாகப் பற்று அறுப்பீர் "" எனப் பகர்ந்தார் (17)
இங்கு உங்களுக்கு எதிர் நிற்கும் கோட்டையும் உளதோ ? (இது படையினரைப் புகழ்ந்து அவர் வீரத் திற உணர்வை அரசன் , உணர்த்தும் முறைமை ) "" ""படைகளை எழுச்சியுறத் திரட்டி அந்த கோட்டையைத் துகளாகச் செய்வீர் "", என்பது , அரசன் அவர்களுக்கு இட்ட ஆணை !
அடல் வானவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து , / கடல் அனைய நெடும் படையைக் கை வகுத்து மேல் செல்வார் /படர் வனமும் நெடுங் கிரியும் பயில் அரணும் பொடியாக /மிடல் உடை நால் கருவி உற வெஞ் சமத்தை மிக விளைத்தார். (திருத் தொண்டர் புராணம் / புகழ்ச் சோழ நாயனார் (18)
தேசத்துக்கு ஆபத்து என்றால் , எப்படி வெகுண்டெழ வேண்டும் என்பதை உணர்ச்சியற்ற மரங்கள் உணர வேண்டும் ! கடந்த ஒரு வாரத்தில் சீனர்களுக்கு எதிராகச் சிந்திக்காதவன் , தேசக் காப்புக்கும் பகை அழியவும் இறைவனை இறைஞ்சாதவன், இந்த ஞான பூமிக்குப் பாரம் ? எங்ஙனம் ஆளும் அருள் ?
நம்மை நன் நெறியில் செலுத்தும் சமயத்தைத் தாங்கிப் பின்னிப் பிணைந்திருப்பது இந்த சிவ பூமி அல்லவா ? சிந்தியுங்கள் ! ஞான வாள் ஏந்துங்கள் !!!
130- கோடி மக்களை உடைய இந்திய நாடு , உலக நாடுகள் நோக்கில் மிகப் பெரிய வர்த்தகச் சந்தை ! நம்மிடம் பொருளை ஈட்டி , வலுத்து , நம்மையே எதிர்த்துத் துரோகம் செய்யும் சீன நாட்டுக்கு முடிவு கட்ட ஒரே வழி ! இது அறப் போர் ! முப்படைப் போரை விடப் பொருளாதாரப் போர் , எதிரிகளையும் துரோகிகளையும் செயவிழக்கச் செய்து விடும் !
இல்லக் காப்புக்காகத் திரைக் கடல் ஓடிச் சென்று பொருள் திரட்டி , இங்கு கொண்டு வருவது , பகை நாட்டோருக்கும் , அகப் பகைவர்களுக்கும் , துரோகிகளுக்கும் , கொட்டிக் கொடுத்து , நமக்கு எதிராக நாமே கேட்டினை வளர்த்துக் கொள்வதற்கா ?
என்னே அறிவுடைமை ?
அறப் போரே , இந்த தேசத்துக்காகத் தம் இல்ல நலன்களையும் , இன்னுயிரையும் , தியாகம் செய்யும் வீரர்களுக்கு நாம் செய்யும் நன்றியாகவும் இருக்கும்.
ஞான வாள் ஏந்துவோம் !!! பகையைப் புறக்கணித்து வெற்றி கொள்வோம்.
இந்தியா முதன்மை வல்லரசாகும் ; எதிரிகள் செயலிழந்து விடுவர் !
சீனம் எதிர் காலத்தில் வறுமையால் பல நாடுகளாகச் சிதறிவிடும் !
எதிர் காலத்தில் போர்களுக்கான நிலை எழாது !
இந்தியச் சிறு தொழில் முனைவோர் வளர்ந்து எழுவர் : வேலையிலாத் திண்டாட்டம் முழுதும் ஒழியும் !
பொருளா தாரத்திலும் இந்தியா தலைமை நிலையினை எய்தும் !
இதை விட நம்மைத் தாங்கி நின்று , ஊட்டி வளர்க்கும் பாரதத் தாய்க்குச் செய்யும் நன்றி வேறுண்டோ ? இதனை , இது நம்மைத் தாங்கும் , நம் தேசம் என்ற உணர்ச்சி இலாச் சுய நலமிகளும், தேசத் துரோகிகளும் பின் பற்றார் ! ஆகவே இந்திய வர்த்தகர்களுக்கு இதில் தனிப் பொறுப்புகள் உள்ளன. "எரிவதை அணைத்தால் கொதிப்பது நின்று விடும் "" ,என்பது அனைவரும் அறிந்த ஞானம். நம் வம்சா வழியினருக்கு , நாம் ஒரு பாதுகாப்பான எதிர் காலத்தை விட்டுச் செல்ல வேண்டாமா? சீனப் பொருட்கள் இன்றி வாழவே முடியாதா என்ன ?
இறைவனிடம் மனமுருகி , தேசத்தைக் காத்தருளுமாறும் , உள் , அயற் பகைகளையும் , உடனிருந்தே கொல்லும் வியாதிகளையும், சத்தியற்றுப் போகச் செய்யுமாறும், இறைஞ்சித் திருவைந்தெழுத்து ஓதுவோம் ; அமைதியாகப் பகைவர்களுக்கு எதிராகப் பொருளாதாரப் போர் புரிவோம் ; பகைவர்களுடன் வர்த்தகம் செய்தல் தேச , சமய , சிவத் துரோகம் என்பதைச் சுற்றி வாழ்வோருக்கு எட்டும் வரை உபதேசித்துத் தொண்டு புரியுங்கள் !
இது கத்தி இன்றி, இரத்தமின்றி இயற்றும் , இறை சத்தியை பகைக்கு எதிராக இயக்கும் போர் ! இந்தியன் என்ற உணர்ச்சி இலாதவனுக்கு அடுத்தப் பிறவி , குடிசையும் , நீரும் உணவும் இல்லாத நாடுகளில் தான் . சிந்தித்தால் இது உறைக்கும் !
திருச்சிற்றம்பலம்
Post by : Komal Sekar in My Whtsapp now shared
N Jambunathan - A1, Sonex Samyuktha -Appartments, - 15, Karnan Street, Rengarajapuram, Koddambakkam, - Chennai 600 024. Hand Phone - 09176159004.
__._,_.___