*ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்*
நெறியில் சிறந்தவர்கள் என்னென்ன அற்புதங்கள் பண்ணினார்கள் என்று கதை புராணங்களில் எத்தனையோ பார்க்கிறோம்.
'பெய்யெனப் பெய்யும் மழை'என்கிற மாதிரியே 'பாய் எனப் பாயும் அக்னி'யைப் பற்றி கண்ணகி கதை சொல்கிறது. அதே மதுரையில் ஞான ஸம்பந்தரும் அவர் தங்கியிருந்த மடத்திற்குச் சமணர்கள் வைத்த நெருப்பு, அவர்களை ஆதரித்த பாண்டிய ராஜாவையே (இறுதியில் அவன் நல்வழிப்படுவதற்கு ஆரம்ப தண்டனையாக) தாக்க வேண்டும் என்று ஈஸ்வரனைப் பிரார்த்தித்தவுடன் அவனிடம் வெப்பு நோய் உருவில் போய்ச் சேர்ந்தது.
Action and reaction are equal and opposite [செயலும் பிரதிச் செயலும் ஸமசக்தி வாய்ந்ததாகவும் எதிரிடையானதாகவுமிருக்கும்] என்ற 'ந்யூடன் லா' எல்லாக் கார்யங்களையும் பற்றின 'கர்மா தியரி'யை அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டுமில்லை; எண்ணத்தின் பிரதிபலனையும், மன நெறியின் சக்தி மற்ற மனங்களின் மீது மட்டுமின்றி 'நேக்சுரல் ஃபோர்ஸஸ்' மீதும் பிரதி விளைவுகளை உண்டாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.
Mental plane, Meta Physical plane, Physical plane [மன மட்டம், பௌதிகாதீதமான ஆத்மிய மட்டம், பௌதிக மட்டம்] மூன்றையும் கோத்து நம் மதத்தில் சொன்னதை Physical plane-ல் [பெளதிக மட்டத்தில்] மட்டும் சொல்வதே ந்யூடன் லா.
'ரியாக்ஷன் ஆப்போஸிட்'டானது [பிரதிச் செயல் எதிரிடையானது] என்று அவர் சொன்னது நல்லதற்கு எதிர் விளைவாகக் கெட்டதும், புண்யத்துக்குப் பிரதியாகப் பாபமும் உண்டாகும் என்று அர்த்தம் கொடுக்காது. பின்னே 'ஆப்போஸிட்' என்று ஏன் சொன்னாரென்றால், ஒரு பந்தைச் சுவர் மேல் எறிந்தால் அது அதே விசையுடன் 'ஆப்போஸிட் டைரக்ஷ'னில் [எதிர் திசையில்] திரும்பி வருகிறாற்போலத்தான் Physical plane-ல் எல்லா ரியாக்ஷனும் இருப்பாதலேயே!
நாம் செய்த நல்லது (புண்யம்) எப்படி வெளியிலே பரவுகிறதோ அப்படியே வெளியிலிருந்து நமக்கு நல்லது (புண்யம்) திரும்புகிறது; கெட்டதும் (பாபமும்) இப்படியே என்றுதான் அதற்கு அர்த்தம்.
– ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
__._,_.___