They are doing a great job: www.forangelsonly.org

[FAO] அற்புதமான வாழ்க்கை போதனை



*பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை*

 

1.       தேவைக்கு செலவிடு.

2.       வாழ்வை கண்டு களி!

3.       ரசனையோடு வாழ்!

4.       வாழ்க்கை வாழ்வதற்கே!

5.       அவ்வப்போது பரிசுகள் அளி.

6.       நண்பர்களிடம் அளவளாவு.

7.       அனுபவிக்க தகுந்தன அனுபவி.

8.       அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.

9.       இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.

10.   மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

11.   உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

12.   உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.

13.   மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.

14.   இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.

15.   வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!

16.   மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

17.   இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

18.   பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

19.   உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.

20.   "அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி" என அறிந்து கொள்.

21.   மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!

22.   அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.

23.   அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.

24.   உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

25.   உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.

26.   அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.

27.   உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.

28.   ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.

29.   "எல்லாமே நான் இறந்த பிறகு தான்" என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.

30.   எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.

31.   பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,  சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!

32.   நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.

   இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!

 

Posted by : N Jambunathan Kodambakkam Chennai



N Jambunathan - A1, Sonex Samyuktha -Appartments, - 15, Karnan Street, Rengarajapuram, Koddambakkam, - Chennai 600 024. Hand Phone - 09176159004.


__._,_.___

Posted by: "N.Jambunathan" <n.jambunathan@yahoo.co.in>


www.ForAngelsOnly.Org




__,_._,___

More....